இரத்த சோகை அறிகுறிகள்,ஏற்படும் காரணங்கள்
ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் நிலைதான் இரத்த சோகை
பொதுவாக சிவப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் நிலைதான் இரத்த சோகை என்று அழைக்கப்படுகிறது.
ஹீமோகுளோபின் அளவு:
- ஆண்களுக்கு 100 மிலி இரத்தத்தில் 14.5 முதல் 15.5 கிராம்களும்,
- பெண்களுக்கு 100 மிலி இரத்தத்தில் 13.4 முதல் 14.5 கிராம்களும் இருக்க வேண்டும்.
- குழந்தைகளுக்கு 6 மாதம் முதல் 5 வயது வரை 11 கிராமுக்கு குறைவாகவும்,
- 6 வயது முதல் 14 வயது வரை 12 கிராமுக்கு குறைவாகவும்
- பெரியவர்களான ஆண்களுக்கு 13 கிராமுக்கு குறைவாகவும்
- பெண்களுக்கு 12 கிராமுக்கு குறைவாகவும்
- கர்ப்பிணிகளுக்கு 11 கிராமுக்கு குறைவாகவும் இருந்தால் இரத்த சோகை ஏற்படும்.
இரத்த சோகை ஏற்படும் காரணங்கள்:
- பெண்கள் பூப்பெய்திய காலம் முதல் தங்கள் மாத விலக்கு காலங்களில் அதிக அளவு இரத்தப் போக்கினால் இரும்புச்சத்தை இழப்பதால்,
- பேறுகாலத்தின் போது இரத்தப் போக்கு ஏற்படுவதால்
- இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுப் பெருட்களைச் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதால்
- மலேரியா நோயால் அவதியுறுவதால்
- தேவைக்கு ஏற்ப உணவு உண்ணாததால்
- குடற் கொக்கி புழுக்களால் பாதிக்கப்படுவதாலும் இரத்த சோகை ஏற்படுகின்றது.
- காச நோயினால் நுரையீரலிலிருந்து இரத்தம் வருதல்
- குடல் புண் காரணமாக வயிற்றிலிருந்து இரத்தம் வருதல்
- மூல நோயினால் மூலத்திலிருந்து இரத்தம் வருதல்
- பெரிய காயங்களிலிருந்து இரத்தம் வருதல்
- பெண்களுக்கு மாத விலக்கின் போது இரத்தம் வெளியேறுதல்
- போன்ற குறிப்பிட்ட இரத்த இழப்புகளாலும் இரத்த சோகை ஏற்படுகிறது.
இரத்த சோகையினால் ஏற்படுகின்ற பாதிப்புகள்:
- குழந்தைகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.
- உடல் வளர்ச்சிக் குறைவு, மன வளர்ச்சிக் குறைவு,
- படிப்பில் கவனம் இன்மை, விளையாட முடியாமை, சக்தி குறைவாகக் காணப்படுதல்.
- இளம் பருவத்தினருக்கு, பள்ளிப் படிப்புகளிலும் மற்றும் செயல்பாடுகளிலும் குறைவான பங்கேற்பு,
- தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்த முடியாமை,
- உடல் உழைப்பிற்கான சக்தி குறைவாகக் காணப்படுதல்,
- தொடர்ந்து அசதி,
- ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுதல்,
- பெரியவர்களுக்கு வேலை செய்ய இயலாமை,
- எளிதில் சோர்வடைதல்,
- பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் பாதிப்புகள்,
- கர்ப்பிணிப் பெண்களுக்கு எடை குறைவாக குழந்தை பிறத்தல், பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் நலக்குறைபாடுகள்,
- பிரசவத்தின் போதோ, அல்லது பிரசவித்த பின்போ, தாய் மரணம் அடையலாம்.
- குழந்தையும் மரணம் அடையலாம்.
- மாதவிடாயின் போது ஏற்படும் இரத்த இழப்பு, கருச்சிதைவு, அடிக்கடி பிள்ளைப்பேறு, பெண்கள் குறைவாக உணவு உண்பது போன்ற காரணங்களால் இரத்த சோகை ஆண்களை விட பெண்களையே அதிகமாகப் பாதிக்கின்றது.
- குழந்தை பிறந்தவுடன் பல பெண்கள் தங்களின் உருவ அமைப்பு குலைந்து அழகு போய்விடக்கூடாது என்று கருதி குழந்தைகளுக்கு தாய்ப்பால் அருந்த தராமல் புட்டிப்பாலினையே புகட்டுவார்கள்.
- இதனால் இரும்புச்சத்துக் குறைவேற்பட்டு, புட்டிப்பாலுக்கு அடிமையான சோகையாக குழந்தை ஆகிவிடுவதுண்டு.
- இதுபோலவே ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்தால் வயிற்று தொல்லையையும் இரத்த சோகையையும் நாமே வரவழைத்துக் கொள்கின்றோம்.
இரத்த சோகையின் ஆரம்ப அறிகுறிகள்:
- சோர்வு,
- மூச்சு வாங்குதல்,
- அன்றாடம் செய்யும் வேலைகளைச் செய்ய முடியாமை
கடுமையான இரத்த சோகை அறிகுறிகள்:
- வேலை ஏதும் செய்யாத போதே மூச்சு வாங்குதல்,
- வெளிறிய முகம்,
- நகம் விரல்கள் வெளுத்துக் காணப்படுதல்,
- கண்கள், நாக்கு வெளிறி இருத்தல்,
- கை, கால், முகம் வீக்கம்,
- மார்பு படபடப்பு.
இரத்த சோகையினைத் தவிர்க்க இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின்கள் நிறைந்த நம் கை அருகில் கிடைக்கக்கூடிய சத்துள்ள உணவுகளை நிறைய சேர்த்துக் கொண்டாலே போதும். இரத்த சோகையினைத் தவிர்க்கலாம்.
இரும்புச்சத்து உள்ள உணவுகள்:
முளைக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, குப்பைக்கீரை, துளசிக்கீரை, மணத்தக்காளிக்கீரை, காலிபிளவர், பாகற்காய், சுண்டைக்காய், கொத்தவரை, வாழைக்காய், பீன்ஸ், சீதாப்பழம், அன்னாசிப்பழம், மாதுளம்பழம், தர்பூசணி, சப்போட்டா, பேரீட்சை, உலர்ந்த திராட்சை, கம்பு, கேழ்வரகு, கொள்ளு, கோதுமை, சாமை, பொட்டுக்கடலை, சோயாபீன்ஸ், பட்டாணி, ஆட்டுக்கறி, ஈரல், முட்டை, மீன், இறால், பொட்டுக்கடலை கஞ்சி, கேழ்வரகுக் கஞ்சி, வெல்லம், அதிரசம், கடலைமிட்டாய், கடலை உருண்டை, பனங்கற்கண்டு கலந்த பால், கருப்பட்டி, பொரி உருண்டை, பொட்டுக்கடலைப் பாயாசம், பேரீச்சம்பழம், வைட்டமின் ‘சி’ இரும்புச்சத்தை கிரகிக்க வைக்கும் ஒர் ஊக்குவிக்கி ஆகும்.
இரும்புச் சத்து உள்ள பொருட்களை சாப்பிட்டு, இரத்த சோகை வருவதை தவிர்ப்போம்.
குறிச்சொற்கள்: