சர்வாங்காசனம்
யோகாசனம்
சர்வாங்காசனம்
செய்முறை
கால்களை ஒன்று சேர்ந்து படுக்கவும். கைகளை நிதானமாக உங்கள் பக்கவாட்டில் விரிப்பில் சாதாரணமாக வைத்துக் கொள்ளவும். கால்களை 90 டிகிரிக்கு உயர்த்தவும். இப்போது உள்ளங்கைகளை அழுத்தி இடுப்பை பூமியிலிருந்து உயர்த்தி கால்களை பூமியை நோக்கி முன்புறமாக கொண்டுவரவும். கைகளை மடக்கி உள்ளங்கைகளால் இடுப்பை பிடித்து கால்களை மீண்டும் 90 டிகிரிக்கும் உயர்த்த வேண்டும்.
உடம்பும் கால்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும்படி உடல் பளுவை தோள்பட்டைகளில் வைத்து சரி செய்ய வேண்டும். கை முட்டிகள் தரையின் மீது இருக்க வேண்டும். 50 அல்லது 100 எண்ணிக்கைகள் அப்படியே ஆடாமல் இருக்க வேண்டும்.
கண்களை திறந்து கால் விரல்களை பார்க்க வேண்டும். கால்களை பூமியை நோக்கி பின்புறமாக கொண்டு வந்து முதுகிலுள்ள கையை பிரித்து விரிப்பின்மீது மெதுவாக முதுகை வைத்து படுத்து கால்களை விரிப்பின் மீது வைக்க வேண்டும்.
பலன்கள்
இந்த ஆசனத்தில் தொண்டைப்பகுதிக்கு அதிக இரத்தம் செலுத்தப்படுவதால் தைராய்டு சுரப்பி ஒழுங்காக வேலை செய்ய ஏதுவாகிறது. இரத்த ஓட்ட மண்டலம் மூச்சு மண்டலம், ஜீரண மண்டலம், உடல் கழிவை வெளியேற்றும் மண்டலம் ஆகியவை சிறப்பாக செயல்படுகிறது. கிட்னி கோளாறுகளை சரி செய்கிறது. உடல் எடையை குறைக்கிறது. முகத்தில் தோளில் ஏற்படும் சுருக்கத்தை போக்கி இளமையான தோற்றத்தை தருகிறது. தலை முடி கொட்டுவதையும் தடுக்கிறது. நுரையீரல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள், குடல் இறக்கம், தூக்கமின்மை போன்ற நோய்களை தீர்க்கிறது.
குறிச்சொற்கள்: